|
அதிசொகுசு பிராடோ வாகன இறக்குமதி தொடர்பாக ரவி கருணாநாயக்க- அனுரகுமார திசாநாயக்க விவாதத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு சுங்கத் திணைக்கள ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த பெருந்தொகையான அதிசொகுசு பிராடோ வாகனஙக்ள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் குறைந்த வரி அறவீட்டுடன் விடுவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் பெருந்தொகைப் பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், நிதியமைச்சர் இதில் நேரடியாகத் தொடர்பு பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த வேண்டு கோளையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் குறித்த விவாதத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு சுங்கத் திணைக்கள ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான சகல விபரங்களும் தங்களுக்குத் தெரியும் என்பதால் தாங்களும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
|
Friday, 5 February 2016
![]() |
வாகன இறக்குமதி தொடர்பான விவாதம்தேவை-- சுங்க ஊழியர் சங்கம் கோரிக்கை |
Loading...
