Saturday, 20 February 2016

வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்க சீனா திட்டம்

வெளிநாட்டவர்கள் சீனாவில் தங்கி வேலை செய்வதற்கான நடைமுறைகளை இலகுவாக்கவுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
Image copyrightCNA
அங்கு தளர்வடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 6.9 வீதத்தால் வளர்ச்சியடைந்தது. ஆனால் அது கடந்த கால் நூற்றாண்டின் குறைவான வளர்ச்சியாகும்.
புதிய நடைமுறைகளின் கீழ், அதிகமான வெளிநாட்டவர்கள் சீனாவில் நிரந்தர வதிவிடத்திற்காக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
அங்கு தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன.
Loading...