Monday, 22 February 2016

காணாமல் போனோர் குறித்த விவாதம் நாளை


காணாமல் போனோர் மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்தை ஈர்க்­க­வுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு பிரே­ர­ணையை முன்­வைக்­க­வுள்­ளது.

அத்­துடன் எதிர்­வரும் 25 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது தொடர்­பா­ன­வி­வா­தமும் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தின் பெப்­ர­வரி மாதத்­திற்­கான இறுதி அமர்வு நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரால் சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள காணாமல் போனோர் மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பாக சபை ஒத்தி வைப்பு பிரே­ரணை தொடர்­பாக விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது.

அதே­வேளை பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் 25 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இந்த அர­சி­ய­ல­மைப்பு பேரவை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பான விவாதம் கடந்த ஜன­வரி மாதம் 09 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வி­ருந்­தது.

ஆனால் ஒன்­றி­ணைந்த எதிர்கட்சி இது தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க வேண்டுமென்று எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...