Tuesday, 9 February 2016

சரத்பொன்சேகா எம்.பியாக இன்று பதவிப்பிரமாணம்!

சரத்பொன்சேகா எம்.பியாக இன்று பதவிப்பிரமாணம்!
சரத்பொன்சேகா எம்.பியாக இன்று பதவிப்பிரமாணம்!
ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இன்று  நாடாளுமன்ற சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் காணி அமைச்சருமான எம்.கே.டி.எஸ் குணவர்தன தீடீரென இயற்கை எய்தியதை அடுத்து நாடாளுமன்ற ஆசன வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

குறித்த வெற்றிடத்திற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் ஏகனமதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிர்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கி அரசியலுக்குள் பிரவேசித்த சரத் பொன்சேகா, பின்னர் ஜனநாயக கட்சி சார்பில் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சரத் பொன்சேகா, கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஜனநாயக கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பொன்சேகாவிற்கு அமைச்சு பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...