Monday, 15 February 2016

தலைவர் பதவி பறிக்கப்பட்டது! மைத்திரியை சாடுகிறார் மகிந்த!

தலைவர் பதவி பறிக்கப்பட்டது! மைத்திரியை சாடுகிறார் மகிந்த!
 தலைவர் பதவி பறிக்கப்பட்டது! மைத்திரியை சாடுகிறார் மகிந்த!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் தாரை வார்க்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை பறித்தெடுத்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு மிடையிலான விசேட சந்திப்பொன்று நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் நேற்று நடைபெற்றது. 

பஸில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் வருகை தந்திருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட மகிந்த,சு.கவின் தலைவர் பதவியை நான் தாரைவார்த்தேன் என்று சிலர் கூறுகின்றனர். நான் அப்படி செய்யவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை பறித்தெடுத்தனர். எனக்கு கட்சியைவிட மக்கள்தான் முக்கியம். மக்கள் எந்த பக்கம் நிற்பார்களோ அந்த பக்கம் தான் நான் நிற்பேன் என்றார். 
Loading...