Saturday, 20 February 2016

விமலுக்கு அழைப்பாணை

கடந்த 6ஆம் திகதி பௌத்தலோக மாவத்த மற்றும் ஹெவலொக் வீதியை தடை செய்தமைக்காக விமல் வீரவன்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கும் மார்ச் 18ஆம் திகதி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தல் விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூஸைனின் இலங்கை விஜயத்தை ஆட்சேபித்து தும்முல்ல சந்தியிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Loading...