Saturday, 20 February 2016

மத்திய கிழக்கில் இலங்கையர் தொழில் இழக்கும் நிலைமை வந்தால் -NDPHR அறிக்கை

எதிர்பாராத விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணாமாக ஆயிரக் கணக்கான இலங்கைத் தொழிலார்கள் வேலை இழக்கும் சந்தர்ப்பம் வெகு விரைவில் சந்திக்க  வாய்ப்புகள் தென்படுகின்றன . இவ்வாறான திடீர் மாற்றம்களுக்கு அரசாங்கம் இப்போதே ஆயத்தப் படுத்துவது புத்தி சாலித் தனம் என நான் கருதுகிறேன்.ஆகையால் இவ்வாறன ஒரு சூழ் நிலையை சந்திக்க நேரும் எனில் வேலை இழந்து நாடு திரும்புவோர் நலன் கருதி அதற்கான முன் ஏற்பாடுகள் அரசாங்கம் செய்யவேண்டும். 

இவர்களுக்கு தொழில் புரிவதுக்கான இலகு கடன் வசதி, அரசாங்க, மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முன்னுரிமை என்பன  வழங்கப் படவேண்டும் . இவ்வாறான வசதிகள் அளிக்கப் படாவிடின் இத் தொழிலார்கள் பல வாழ்வாதார இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது நிதர்சனம் .

இவை பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சார்பாக நான் வெளி நாட்டு தொழில் வாய்ப்பு நிலையம் மற்றும் இது சமந்தப் பட்ட அரசியல் அதிகாரிகளுக்கு ஒரு ஆலோசனை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளேன். இத்துடன் அரசியல் வாதிகளும் இதற்கான மேல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்   .


தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா 
Loading...