5 நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை மே மாதம் சமர்ப்பிப்பு
பொது முயற்சியான்மை குறித்த நாடாளுமன்ற செயற்குழுவினால் ஐந்து நிறுவனங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, இலங்கை ஒளடத கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் மற்றும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி ஆகியன தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக சில நிறுவனங்களின் விசாரணை அறிக்கை ஒன்றாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.எனினும் இம்முறை ஒவ்வொரு நிறுவனம் தொடர்பிலும் தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
