Sunday, 20 March 2016

முஸ்லிம் காங்கிரசின் மகா நாடு நடை பெற்றதைப் பற்றி NDPHR

நடந்து முடிந்த முஸ்லிம் காங்கிரசின் மகா நாடு நடை பெற்றதைப் பற்றி பலரும் பலவிதமாக  கதைக்கின்றனர். இதைப் பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹோடீன் பாவாவிடம் அவரது அபிப் பிராயத்தைக் கேட்ட போது அவரது கருத்தைப் பின்வருமாறு முன் வைத்தார்.

கூட்டத்துக்குப் போனவன்  எல்லாம் வா க்குப் போடுவனும் அல்ல , வாக்குப் போடுபவன்   எல்லாம் கூட்டத்துக்குப் போனவனும் அல்ல.

இது ஒரு கட்சியின் வருடாந்த மகா நாடு என்ற வகையில் பலர் வருவார்கள்,அங்கு வரும் ஜனத் திரளை வைத்துக் கொண்டு ஒரு கட்சியின்  பலம் மற்றும் பலகீனத்தைக் கணக்கிட முடியாது. மக்களின் மனம் வாக்கு சீட்டை கையில் எடுக்கும் போதே ஒரு தடுமாற்றம் ஏற்படும் யாருக்கு வாக்கு அளிப்பது என்று அதுதான் மனச்சாட்சி , அவ்வாறன தடுமாற்றம்  நான் வாக்கு அளிக்கும் போது எனக்கும் ஏற்பட்டுள்ளது . 

பல கட்சிகளைச் சேர்ந்த மக்களும் அங்கு சமூகம் அளித்து இருக்கலாம் ,அக் கட்சிக் காரர்களுக்கும் தெரியாது ,அதே போல் எங்களுக்கும் தெரியாது அவர்களது மனதில் என்ன தீர்மானம் வைத்துள்ளார்கள் என்று. ஆனால் சில தீவிர கட்சி பற்றுக் கொண்டவர்களும் அங்கு இருப்பார்கள்,அவர்களது எண்ணிக்கை குறைவாகவே  இருக்கும் .

நாம் ஒரு கட்சியை அல்லது அரசியல் வாதிகளை விமசரிப்பதில் ஒரு வித பிரயோசனமும் நாம் அடையப் போவதும் இல்லை, அதை நாங்கள் வாக்கு அளிக்கும் முன்னர் யோசித்து இருக்க வேண்டும். இப்போது தலை  மேல் கை வைத்து அழுவதில் பயன் இல்லை. விட்ட தவறை நிவர்த்தி செய்ய மக்கள் சிலவருடம்கள் பொறுமையாக காத்திருக்கத்தான் வேண்டும்.ஆனால் மீண்டும் தவறு  விடாது இருப்பதுதான் அவர்களுக்கு விமோசனம் கொடுக்கும்.

ஒரு கட்சிக்குள் அரசல் புரசல்கள் ,மற்றும் உள் பூசல்கள்  ஏற்படும் ,அது சகஜம். அதில் நாங்கள் தலையிட்டு ஒன்றுமே சாதிக்க முடியாது.அதை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.

கடைசியாக நான் இங்கு ஓன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்,அதாவது தேர்தல் காலம்களில் ஒருவழிப் பாதையில் கிளிப் பிள்ளைகள் போன்று செல்லாது மற்றக் கட்சிகளும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அலசிப் பார்ப்பது சமூகத்துக்கு நன்று 

அதே போல் நாம் சாதாரண மக்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எமது கடமை அது  ஒரு அரசியல் வாதியின் நடவடிக்கை அல்லது செயல் முறைகள் என்பனவாக இருக்கலாம் ,ஆனால் அவ் விழிப்புணர்வு மக்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர புறம் கூறுவது அன்று என்று கூறினார்

கடைசியாக அரசியல் வாதிகள் மேடைகளில் கூறுவதை நாம் ஒரு தரவாக எடுக்கக் கூடாது, அவர்களது செயல்களைத்தான் சிந்திக்க வேண்டும்   






Loading...