மக்கள் கருத்தறியும் காலம் நீடிப்பு
புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் ஒரு மாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் நடவடிக்கைகள் இந்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில் குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதன் காலம் நீடிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேயநாயக கூறினார்.
நாடுபூராகவும் மக்கள் கருத்துக்கள் பெறப்படுவதுடன் இதில் 2200 பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அரசியலமைப்பு பிரச்சினை சம்பந்தமான கருத்துக்களை விட மக்களின் குறைகள் சம்பந்தமான கருத்துக்கள் அதிகம் கிடைத்துள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தி அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது கூறியுள்ளார்.
