Wednesday, 30 March 2016

ஐக்கியம் - ஒருமைப்பாட்டுக்கு தீங்கற்ற வகையில் அதிகாரப்பகிர்வு! சம உரிமையே இறைமை என்கிறார் ரணில்!

ஐக்கியம் - ஒருமைப்பாட்டுக்கு தீங்கற்ற வகையில் அதிகாரப்பகிர்வு! சம உரிமையே இறைமை என்கிறார் ரணில்!
ஐக்கியம் - ஒருமைப்பாட்டுக்கு தீங்கற்ற வகையில் அதிகாரப்பகிர்வு! சம உரிமையே இறைமை என்கிறார் ரணில்!
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியா பிரிட்டன் போன்ற நாடுகள் ஒவ்வொரு முறையில் அதிகாரப்பகிர்வை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எமது நாட்டுக்குப் பொருத்தமான சித்தாந்ததுக்கு அமைய அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த விடயத்தில் தற்போதைய அரசின் தன்மையில் பிரச்சினை இல்லை என்றும் குறிப்பிட்டார். 

மக்களின் இறைமை என்பது பெரும்பான்மையினர் விருப்பத்திற்குரிய விடயமல்ல. அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதே இறைமையாகும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற அரசமைப்பு தொடர்பான கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்m
2017ஆம் ஆண்டு எமது நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டைக் கொண்டாடவுள்ளோம். இது குறித்து சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடக் பேச்சு நடத்தப்படவுள்ளது. இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது அந்த அரசமைப்பை உருவாகிய அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தது. அதனால்m அந்தக் கட்சியின் கருத்து அதில் காணப்பட்டது. இரண்டாவது அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது நான் இருந்தேன்.

13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் அதில் பங்கேற்றன. இதில் சுதந்திரக் கட்சி பங்கேற்றிருந்தால் 1988ஆம் ஆண்டில் பல மாகாணசபைகளைக் கைப்பற்றியிருக்க முடியும். தற்போது ஒரு கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசுதான் உள்ளது. 

எனவே, இதில் ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ சட்டவரைவு இருக்காது. அனைருக்கும் பொதுவான ஒன்றுதான் இருக்கும். அடுத்த மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்பு பேரவையாக கூடுகின்றது. அரசமைப்பில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், மக்களின் இறைமையையும், சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையர் என்ற அடையாளத்தினூடாக அனைவரும் சமாமானவர்கள் எனக் கருதப்படுவர். சகல மக்களும் சமய, கலசார உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும். அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அடுத்ததாக மக்களின் இறைமையினூடாக சகல மக்களினதும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்களின் இறைமை என்பது பெரும்பான்மையினர் விருப்பத்திற்குரிய விடயமல்ல.

அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதே இறைமையாகும். அடுத்ததாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறாக அரசமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்காக குழுவொன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழுவின் ஆலோசனைகள் கிடைத்தவுடன் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம். விசேடமாக நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். 

தற்போதைய அதிகாரங்களை மேலும் குறைக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர். அடுத்ததாக இரண்டாவது பேரவையொன்று அவசியமா எனப் பார்க்க வேண்டும். சிலர் தேவை என்கின்றனர். சிலர் தேவையில்லை என்கின்றனர். எனவே, அது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். அடுத்ததாக அதிகாரப்பகிர்வு குறித்து பார்க்க வேண்டும். தற்போதைய அரசின் தன்மை குறித்து பிரச்சினை இல்லை. நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளன. அமெரிக்கா ஒரு முறையிலும், இந்தியா ஒரு முறையிலும், பிரிட்டன் ஒரு முறையிலும் அதிகாரப் பகிர்வைச் செய்துள்ளன. 

இந்நிலையில், எமது நாட்டுக்குப் பொருத்தமான சித்தாந்தம் குறித் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது பற்றி எனக்குத் தெரியும். அதிகாரத்தைப் பகிர்வது மட்டுமன்றி அதை பன்முகப்படுத்துவது குறித்துப் பார்க்க வேண்டும். மேலும், தேவைக்கு மேலதிகமாக அமைச்சுகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் ஆராய வேண்டும் என்றார். 
Loading...