Wednesday, 6 April 2016

ஜோன் அமரதுங்கவுக்கு பிரதமர் எச்சரிக்கை!

ஜோன் அமரதுங்கவுக்கு பிரதமர் எச்சரிக்கை!
ஜோன் அமரதுங்கவுக்கு  பிரதமர் எச்சரிக்கை!
வத்தளை மாபொலையிலுள்ள நடைபாதையை உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று  நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

தாம் நினைத்தவாறு நடைபாதைகளை உடைக்க வேண்டாமென அமரதுங்கவை பிரதமர் எச்சரித்ததாக ரஞ்ஜன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இவ்விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும் பேசப்படவில்லையென ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் கபீம் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நடைபாதையை உடைத்த குற்றச்சாட்டை அமைச்சர் ஜோன் அமரதுங்க முற்றாக நிராகரித்து வரும் நிலையில், சிவில் சமூக அமைப்பினரால் நேற்றைய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...