நீங்கள் யாரோடும் அரசியல் விளையாடலாம். ஆனால், இந்த கிழக்கின் எழுச்சி என்று ஒரு குழுவினர் மாரி காலத்தில் மழைக்குப் பின் வரும் கார்த்திகைப் பூச்சிகள் போன்று இஸ்லாமிய வரலாற்றோடு அவர்களது நடவடிக்கைகளை ஒப்பீடு செய்து மக்களது உணர்ச்சிகளைத் தூண்டுவது இஸ்லாத்தின் புனித நிகழ்வுகளை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதென தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் மிகக்கவலையுடன் எச்சரித்துள்ளார்.
பத்ர் யுத்தம் நடைபெற்றது போன்று இவர்களும் நடக்கப் போவதாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்துடன் ஒப்பிட்டு இவர்களது எழுச்சியும் அதே போன்றதான கருத்துக்களை அவ்வெழுச்சியின் தலைவர் என்று சொல்லப்படுபவரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சாதாரண அரசியல் செயற்பாட்டை எதனோடு ஒப்பிட வேண்டுமென்ற தராதரம் தெரியாமல், இந்த கேடு கெட்ட குழுவுக்கு இவ்வாறான கருத்துக்களை முன் வைத்துள்ளமை கண்டுக்கத்தக்கது.
இச்சவால்கள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றுவதற்காக எனக்கூறும் நீங்கள், எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். சொல்லுங்கள். புனித இஸ்லாமிய வரலாற்றோடு விளையாட வேண்டாமென்று நான் இவர்களை எச்சரிக்கிறேன். கிழக்கின் முஸ்லிம் சமூகம் இவ்விடயத்திலும், இவர்கள் விடயத்திலும் மிகக்கவனமாக இருக்க வேண்டுமென தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன்