தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே அவரது தோழி சசிகலாவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து பதிமூன்று கிலோ எடை குறைந்துள்ளாராம் சசிகலா. அவ்வப்போது மயக்கமும் வந்து விடுவதாக போயஸ் கார்டனுடன் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை வியாதிக்காரரான சசிகலா, தினமும் கார்டன் வளாகத்திலேயே நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். கடுமையான மூட்டு வலிப் பிரச்னையால் அவதிப்படும் சசிகலா அதற்கான மருந்து மாத்திரைகளும் எடுத்துவருகிறாராம்.
அப்போலோவில் ஜெயலலிதாவின் உடல் மிகமோசமானபோது மயங்கி விழுந்த சசிகலாவுக்கும் அங்கே பிரத்யேகமாக சிகிச்சை நடந்திருக்கிறது. மூன்று மாதங்களில் 13 கிலோ எடை குறைந்து சசிகலா பலவீனமாக இருப்பதாக அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
உண்மையைச் சொல்லப் போனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தான் ஒய்வு எடுக்க வேண்டும் என்றுதான் சசிகலா விரும்பினாராம். போதும் என்னை விட்டு விடுங்கள் என்று தான் கூறினாராம்.
என்னால் இதற்கு மேல் ஓட முடியாது. எனக்கு வெளியுலகமே மறந்து விட்டது என்றுதான் நெருங்கிய சொந்தங்களிடம் கூறினாராம்.
அப்படியானால் விடாபிடியாக அவருக்கு ஏதோ ஒரு நிர்பந்தம், எங்கிருந்தோ ஒரு கட்டாய கட்டளை வந்திருகிறது என விபரம் அறிந்தவர்கள் பேசிக்கொள்கின்றனராம். புலிவாலைப் பிடித்த கதை போல அவரால் மீண்டு வெளியே வர முடியாத ஒரு மிரட்டல் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் ஆழ்ந்து யோசிக்கும் சில அரசியல் நிபுணர்கள்.
அவ்வளவு எளிதாக சசிகலாவை டெல்லி விட்டு விடாது என்றும் அவர்கள், நினைத்த சில விஷயங்கள் நிறைவேறினால் தான் சசிகலா வெளியே வர முடியும் என்றும் இல்லை என்றால் வாழ்நாள் முழுக்க கம்பி எண்ண வைத்து விடுவார்கள் என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறி அதிர வைக்கின்றனர்.
