Monday, 1 October 2018

மன்னாரில் 141 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை 77ஆவது தடவையாக மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று திங்கட்கிழமை 77 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 76 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுமார் 9 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை 77 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...