பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்நிலை மாறவேண்டும்.
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக சர்வதேச முதியோர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டுதான் முதியோருக்கான தனி தினமும், சிறப்பு திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இன்றைய சூழலில், முதியோருக்கான சுதந்திரம், பங்களிப்பு, வயதில் மூத்தவர்களை மதித்தல் போன்றவற்றை நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாக்குவது தான் இந்த தினத்தின் மூலக்கூறு.
மனிதர்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல், முழுமையடைதல், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சமூகம், கலாசாரம், அரசியல் போன்றவற்றிலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் ஆகியவை அவசியம்.
மருத்துவர்களின் ஆய்வின்படி பெரும்பாலான முதியோரின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் மனஅழுத்தம், கவலைகள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பதற்றம் என்று சொல்லப்படுகிறது.
முதியவர்களை மற்றவர்களைப்போன்று பார்க்காமல் அவர்களது உடல் மற்றும் மன நலனில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.
ஆனால் பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் தான் நடக்கிறது.
முதியோர்களின் வழிகாட்டல்கள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. அவர்களை சுமையாக கருதாமல்,வரமாக கருதுங்கள். நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோர்களை கவனிக்க முன்வர வேண்டும்
பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]
அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும். 2011ஆம் ஆண்டில் உலக சனத் தொகையில் 60 லட்சம் பேர் வயோதிபர்களாக இருந்தனர். 2025ஆம் ஆண்டாகும் போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
இலங்கையில் தற்போதைய வயோதிபர்களின் சனத் தொகை 14. 6 வீதமாகும். இதன் படி சுமார் 30 லட்சம் வயோதிபர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதமானோர் தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்று சதவீதமானோர் வயோதிபர் இல்லங்களில் வாழ்கின்றனர்.
இலங்கையில் வயோதிபர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாயிரமாம் ஆண்டில் ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. முதியவர்கள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்கு ஒரு தேசிய சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.முதியோர் செயலகம் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும். வயோதிபர்களுக்காக விசேட அடையாள அட்டையும் வழங்கப்படுகின்றது. 2013ஆம் ஆண்டின் அறிக்கைக்கு அமைய வயோதிபர்களை கவனிக்கும் நாடுகள் வரிசையில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகிப்பதாகக் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்து.
அஸீம் கிலாப்தீன்