Friday, 5 October 2018

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கொழும்பு பகுதியிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (05) நண்பகல் பரீட்சைகள் திணைக்களத்தில் இந்த பெறுபேறுகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலிடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk  எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை 355326 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Loading...