Thursday, 4 October 2018

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 ரூபாவுக்குரிய உணவுப் பொதிகள்

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அரசாங்கம் மாதாந்தம் 2,030 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நுகர்வோர் சபை, சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து உணவுப் பொருட்களை பொதி செய்து இன்னும் ஓரிரு தினங்களில் விநியோகிக்க ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று அல்லது அதனிலும் குறைவான எண்ணிக்கையுடைய குடும்பங்களுக்கு 4,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் மூவரிலும் அதிக எண்ணிக்கையுடை குடும்பங்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் வழங்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...
  • வெங்காயத்தில் உள்ள‍ அதி அற்புதமான ஐம்பது (50) தகவல்கள்24.10.2015 - Comments Disabled
  • Indian Army’s Storming Of Myanmar14.06.2015 - Comments Disabled
  • அதிகாரிகளைக் கொன்ற சீன தூதரக அதிகாரிகள் சீனாவிடம் ஒப்படைப்பு24.10.2015 - Comments Disabled
  • மெரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படும்-பேச்சாளர் ஜேசுஆ ஷேன்28.06.2015 - Comments Disabled
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சர்வதேச விசாரணையை வலியுறுத்த போராட்டம்..01.09.2015 - Comments Disabled