Tuesday, 2 October 2018

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழு இலங்கை விஜயம்




பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான  உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (02) இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இக்குழு இலங்கை வருகின்றது.

இலங்கை – பாகிஸ்தான் இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே இக்குழு இலங்கை வருகின்றது.

இக்கலந்துரையாடல் இரு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான தொழில்சார் மற்றும் பரஸ்பர நன்மைகளை விருத்தி செய்வதனை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
Loading...