Tuesday, 2 October 2018

ஜப்பான் யுத்தக் கப்பல்கள் இரண்டு இலங்கையில்

சுற்றுலா விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் யுத்தக் கப்பல்கள் இரண்டு தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானிலுள்ள சுய பாதுகாப்புக்கான கடற்படைக்குரிய இந்த கப்பல்கள் இரண்டும் “காகா” மற்றும் “இனசுமா” எனும் பெயரில் அழைக்கப்படுகின்றன.

காகா கப்பலில் 400 பேர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்புப் பணியில் ஈடுபடக் கூடிய ஹெலிகொப்டர்கள் நான்கு இந்த கப்பலில் காணப்படுகின்றன.

ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்த கப்பல்கள் இரண்டிலும் உள்ள பணியாளர்கள் இலங்கை கடற்படையினரின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி இந்தக் கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 
Loading...