ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்ற நிலையில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள விஷேட பொருளாதார நிபுணர்கள் குழு , சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதார போட்டி தன்மையினால் இலங்கைக்கான சீன உதவி திட்டங்களிலும் வீழ்ச்சி ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்களை கருத்தில் கொண்டு நாட்டின் முக்கிய பொருளாதார நிலைகளை வலுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்துத் தரப்புகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று திங்கட்கிழமை பொருளாதார குழு சந்தித்தபோதே மேற்கண்டவாறு ஆலோசனை வழங்க்கட்டது.
இதனடிப்படையில் நிதி அமைச்சு , அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ,கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வங்கி ஊடாக பொருளாதார உபாய முறைகள் தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.