Monday, 1 October 2018

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு புதிய வீடொன்றை வழங்க அரசு தீர்மானம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு கொழும்பு 7 இல் புதிய வீடொன்றை பெற்றுகொடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

கொழும்பு 7இல் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில், அமைந்துள்ள வீடொன்றைப் புனரமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த இல்லத்தை புனரமைக்கவுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் மேலதிக புனரமைப்புச் செயற்பாடுகளுக்காக 28 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம், திறைசேரி என்பன மேற்படி வீட்டை புனரமைப்பதற்கான நிதியை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...