Monday, 1 October 2018

கொழும்பு குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு செல்வது பிற்போடப்பட்டுள்ளது

கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகள் புத்தளம்- அருவக்காலு குப்பை சேகரிப்பு மத்திய நிலையம் மற்றும் சுகாதார கழிவு சேகரிக்கும் மத்திய நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக, பெருந்தெருக்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றிலிருந்து(1) குறித்த குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு செல்ல இதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தாமதம் காரணமாக, கொழும்பு குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புத்தளம்- அருவக்காலு குப்பை இறக்கும் மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் ஒப்பந்தம் சைனா ஹாபர் இன்ஜினியிரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு, டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செய்யப்பட்டது.

105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வேலைத்திட்டத்தை நவம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக, குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்துக்கு அமைவாக, அருவாக்காலு வரை அமைக்கப்படும் ரயில் பாதை ஊடாக, கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு செல்ல முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதமே நிறைவு செய்யப்படுமெனவும், அதுவரை குப்பைகளை பிரதான வீதியூடாக கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...
  • சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை21.08.2017 - Comments Disabled
  • Government Regains Forward Momentum 23.11.2015 - Comments Disabled
  • நாடாளுமன்றத்தில் தவறான உரையை வாசித்த ஜிம்பாப்வே அதிபர்16.09.2015 - Comments Disabled
  • அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஒரு திறந்த மடல்20.02.2016 - Comments Disabled
  • Applications called for Grade 1 admissions for 2016 11.06.2015 - Comments Disabled