Friday, 5 October 2018

ஞானசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (05) விசாரணை செய்யப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Loading...