போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களைத் தடுப்பதற்கான அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிஸாருக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவற்கு சட்டரீதியான அதிகாரத்தை இராணுவம் கோரியுள்ளது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.