Thursday, 11 October 2018

கூல் பிளானட் (Cool Planet) கடை பற்றி எரியும் காணொளி.



Read More »

பத்தரமுல்ல பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் தீ

















பத்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளது.

கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது குறித்த பகுதிக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பிரிவின் ​பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Read More »

MMA குத்துச்சண்டை வீரர் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் சம்பியன்

UFC குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனாகியுள்ளார். அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை தோற்கடித்தே, ரஷ்யா வீரர் கபீப் சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளார். 
சர்வதேச குத்துச்சண்டை கோதாக்களில், யு.எவ்.சி. கோதா மிகவும் முக்கியத்துவம் மிக்கதாய் அமைகின்றது. உலகின் அதிபார நட்சத்திர குத்துச்சண்டை வீரர்கள் இந்த கோதாவில் கலந்துகொளவதே அதற்கான காரணமாகும்.
அதற்கமைய, இந்த வருட யு.எவ்.சி. குத்துச்சண்டை கோதாவின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோ மற்றும் அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
கோதாவின் முதல்சுற்றை கபீப் நமாகெமேடோவ் வெற்றிகொண்டதோடு, நான்காவது சுற்றில் கோனர் மெக்கிரகரை வீழ்த்தி, கபீப் நமாகெமேடோவ் சம்பியன் மகுடத்தை சூடினார்.
3 நிமிடங்கள் மற்றும் 3 செக்கன்களில் கோதாவின் இறுதிச்சுற்றில் கோனர் மெக்கிரகரை, கபீப் வீழ்த்தியிருந்தியமை சிறப்பம்சமாகும். யு.எவ்.சி. குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் வெற்றிகொள்ளும், தொடர்ச்சியான ஏழாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற யு.எவ்.சி. கோதாவிலும் அமெரிக்காவின் அலெக் ஷான்டர் ஜேவை, கபீப் நமாகெமேடோவ் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

Read More »

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விசேட கூட்டம் இன்று

ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (11) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்​​பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read More »

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்: கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.

மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என ஆவேசமாக தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறும் கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரம் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »

சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விலை ஏற்றத்துடன், ஒக்டைன் 92 ரக பெற்றோல் ரூபா 149 இலிருந்து 155 ரூபாவாகவும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் ரூபா 161 இலிருந்து 169 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ரூபா 133 இலிருந்து  141 ரூபாவாகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆம் திகதி திருத்தம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »

அக்குறணை வெள்ளம்: தீர்வு காண விசேட செயலணி

மழை காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.

முறையற்ற பாலங்களும் கட்டடங்களும் அமைத்திருப்பதானாலும் ஆறுகளின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலங்கள் போதியளவு உயரத்தில் நிர்மாணிக்கப்படாமல் இருப்பதனாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டன.

இதுதவிர, உரிய காலங்களில் அங்குள்ள ஆறுகளிலிருந்து மண் அகழப்படாமை, ஆறுகளில் கழிவுப் பொருட்களை கொட்டுதல் போன்ற காரணங்களினால் நீர் வழிந்தோடும் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் இலகுவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காரணிகளாக கூறப்பட்டன.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகிவற்றுடன் பேராதனை பல்கலைக்கழகம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் , நில அளவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, அக்குறணை பிரதேச செயலகம், அக்குறணை பிரதேச சபை, பூஜாப்பிட்டிய பிரதேச சபை, தாழ்நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் பிரதேச சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட செயலணி ஒன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணி இப்பிரதேசத்திலுள்ள மக்களின் ஒத்துழைப்பை பெற்று மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான திட்ட வரைபொன்றை உருவாக்கி அதற்குத் தேவையான நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
Read More »
Loading...