அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாலர் நோட்டுகளில் பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருக்கிறது.
அமெரிக்க டாலர் நோட்டுகளில் இதுவரை ஆண் தலைவர்களின் உருவங்கள் மட்டுமே இடம் பெற்று வந்து நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டு அச்சிடப்படவிருக்கும் 10 டாலர் நோட்டுகளில் புகழ்பெற்ற பெண் ஒருவரின் உருவத்தை அச்சிட அந்த நாட்டு நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அந்த 10 டாலர் நோட்டு வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஜேக்கப் லியூ கூறுகையில், அமெரிக்க டாலர் நோட்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருப்பது பெருமைக்குரியது. அந்த டாலர் நோட்டில் யாருடைய உருவத்தை அச்சிடுவதை என்பது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யப்படும் என்றார்
