Saturday, 4 July 2015

ஜனாதிப‌தி மைத்ரி த‌லைமைலான‌ சுத‌ந்திர‌ க‌ட்சியை ஆதரிக்கும் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Mubarak Abdul Majeed


எதிர் வ‌ரும் பொதுத்தேர்த‌லில் ஜ‌னாதிப‌தி மைத்ரிபால சிறிசேன‌ த‌லைமையிலான‌ ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியை ஆத‌ரிப்ப‌து என‌ உலமா க‌ட்சி முடிவு செய்துள்ள‌தாக‌ அத‌ன் த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,
இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு மிக‌ப்பெரும் சேவைக‌ளை செய்த‌ க‌ட்சிக‌ளுள் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சி மிக‌ பிர‌தான‌மான‌தாகும். 

அத்துட‌ன் நாட்டில் ஆட்சி மாற்ற‌த்தின் த‌லைவ‌ரான‌ ஜ‌னாதிப‌தி மைத்ரிபால‌ சிரிசேனா ம‌க்க‌ள் அபிமான‌ம் பெற்ற‌ எளிமையான‌ சிறந்த‌ த‌லைவ‌ராக‌ நாட்டை கொண்டு செல்கிறார் என்ப‌தை எம‌து க‌ட்சி அவ‌தானித்து வ‌ந்துள்ள‌து. நாட்டு ம‌க்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌டும் ஜ‌னாதிப‌தியின் க‌ர‌ங்க‌ளை ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து ச‌மாதான‌த்தை விரும்புவோர் என்ற‌ வ‌கையில் எம‌து க‌ட்சொயின் க‌ட‌மையாகும்.

இந்த‌ வ‌கையில் ஜ‌னாதிப‌தியையும், அவ‌ர் த‌லைமையிலான‌ சுத‌ந்திர‌க்க‌ட்சி ம‌ற்றும் ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர முன்ன‌ணி ஆகிய‌வ‌ற்றுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என்ற‌ தீர்மான‌த்தை ப‌ல‌த்த‌ ம‌சூறாவின் பின் முடிவெடுத்துள்ள‌து. அத‌ன் ப‌டி எதிர் வ‌ரும் போது தேர்த‌லில் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் உல‌மா க‌ட்சி ஜனாதிப‌தி மைத்ரி த‌லைமைலான‌ சுத‌ந்திர‌ க‌ட்சியை ஆத‌ரிப்ப‌துட‌ன் அத‌ன் வெற்றிக்காக‌ நாடு முழுவ‌தும் பிர‌ச்சார‌த்தை மேற்கொள்ள‌வுள்ள‌தாக‌ முபாற‌க் மௌல‌வி மேலும் தெரிவித்தார்.

Loading...