
எதிர் வரும் பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் மரத்தை வெட்டி
அகற்றிய பெருமையை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியையே சாரும்.பல மாதம்களாக பல ஊடகம்களில் வெளி
வந்த அறிக்கைகள் மற்றும் செய்திகள் ,அதற்கான கருதுக்களை அலசி ஆராய்ந்த போது வெளிப் பட்ட
உண்மை என்னவெனில் ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் விடப் பட்ட ஊடகம் மூலமான
விழிப்புணர்வு அறிக்கைகள் மக்கள் மீது மிகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது .
தேசிய ஜனநாயக மனித
உரிமைகள் கட்சியின் அறிக்கைத் தாக்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்
கட்சியிடம் தஞ்சம்
அடைந்துள்ளது எனக் கருதலாம் .
தேசிய ஜனநாயக மனித
உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா இவ் அரசியல் கள போராட்டத்தில் அவரது கட்சி
கிழக்கில் கால் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
அரசியல் ஆய்வு - முகமது இர்பான்
