Wednesday, 1 July 2015

சர்வதேச நிதியுதவி எதுவும் பெறமுடியாத நிலையில் கிரேக்கம்

பகிக
கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்
கிரேக்கம் அதன் ஐந்தாண்டு கால கடன் நெருக்கடியில், முதல்தடவையாக எந்தவிதமான சர்வதேச நிதியுதவிகளையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை கிரேக்கம் செலுத்தத் தவறிய நிலையிலேயே அந்நாட்டுக்கான நிதியுதவிகள் தடைப்பட்டுள்ளன.
யூரோ வலய நிதியமைச்சர்களும் கிரேக்கத்தின் புதிய கடன்மீட்சித் திட்டத்துக்கான யோசனைகளை நிராகரித்துள்ளனர். எனினும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் மீண்டும் பேசவுள்ளனர்.
எனினும், ஞாயிறன்று கிரேக்கம் நடத்தவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முன்னதாக, தீவிரமான பேச்சுக்களுக்கு வாய்ப்பில்லை என்று ஜெர்மனி ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
யூரோ வலயத்தில் கிரேக்கத்தின் உறுப்புரிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாக ஏதன்ஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.
Loading...