|
இலங்கையில் புதிய அரசு ஆட்சி புரிகிறது என்றும் அவ் நல்லிணக்க அரசில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கவிஞர் அப்துல் ரகுமானின் பவள விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ரவுப் ஹக்கீம் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவத்தின் வசமிருந்த தமிழ் மக்களுக்குரிய இடங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் நீண்ட காலத்திற்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராகி உள்ளமை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இலங்கை அரசு நடத்திய உள்ளக விசாரணையில் போர்க்குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் இதனை இலங்கை அரசு உறுதியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்றும் ஹக்கீம் கூறினார்.
போர்க் குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அவர் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் சுமுகமான தீர்வுகளை புதிய அரசு எட்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
|
Tuesday, 27 October 2015
![]() |
நல்லிணக்க அரசில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்-சென்னையில் ரவுப் ஹக்கீம்! |
Loading...
