Thursday, 21 January 2016

பிரதியமைச்சா் எச்.எம். ஹரீஸ் இலங்கையில் மாட்டிரைச்சி உண்பது தடுப்பது பற்றி ஊடகமாநாட்டில் கருத்து

(அஷ்ரப் ஏ சமத்)

இன்று (21) விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற  ஊடக மாநாட்டில்
பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ்  கருத்து தெரிவிக்கையில் -

அன்மைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா மாட்டிரைச்சி உண்பதை தடுப்பது சம்பந்தமாக தெரிவித்த கருத்தினை   ஸ்ரீ-.ல.மு. காங்கிரசின் பிரதித்
தலைவா் என்ற ரீதியில் மிகவும் ஆட்சேபனை தெரிவிக்கின்றேன்.  எமது
கட்சிக் குழு கூடி மாட்டிரைச்சி உண்பதை தடுப்பது பற்றி ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேனா தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்போம். எமது தலைவா் அமைச்சா் ஹக்கீம் அவா்களின் தலைமையில் கூடி ஒரு முடிபு எடுத்து இதனை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிப்போம்.

இந்த நாட்டில் மாடருப்பது தொழில் செய்பவா்கள் மற்றும் கூடுதலான
மாட்டிரைச்சி உண்பவா்கள் முஸ்லீம்கள் அத்துடன் எமது , இஸ்லாமிய
மதக் கடமைகளில் குர்பான் கொடுக்கும் நிகழ்வுகளில் மாட்டிரைச்சி
உள்ளடக்கப் பட்டிருப்பதால் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ்  மாடருப்பதை தடை செய்வது என்ற கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கும்.

Loading...