Friday, 5 February 2016

கொரியாவிலுள்ள இலங்கையர்களால் கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?






கொரியாவிலுள்ள இலங்கையர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக பெரும் பங்காற்றி வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட மனிஷா குணசேகர வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இவர்களால் வருடாந்தம் இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானம் ஈட்டிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது சுமார் 30,000 வரையான இலங்கையர்கள் கொரியாவில் பணி புரிவதாகவும் மனிஷ குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தினால் அங்குள்ள இந்த நாட்டுப் பணியாளர்கள் குறித்து, ஆராயப்படுவதாகவும், இதன்பொருட்டு தூதரக அதிகாரிகள் கொரியா முழுவது சென்று, விவரங்களை அறிந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Loading...