Thursday, 11 February 2016

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படாது!

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படாது!
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படாது!
இறுதிக்கட்டப் போரின் போதான போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டியுள்ளது. எனவே, சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதில்லை.

நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் சுயாதீனமான முறையில் இயங்கி வருகின்றன. எனவே, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான அனைத்து விசாரணைப் பொறிமுறைமையும் உள்ளக ரீதியானதாகவே அமைய வேண்டும்.

மேற்குலக நாடுகளின் நீதவான்கள் தொழில்நுட்ப உதவிகள் போன்ற எமக்கு தேவைப்படாது. உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

தற்போது நாட்டில் சுயாதீனமான நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு காணப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் போன்று அல்லாது நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு மீது சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்த காரணத்தினால் சர்வதேச விசாரணைகளை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது. மகிந்த நாட்டின் நன்மதிப்பை சர்வதேச ரீதியில் அழித்தார் எனவும் போர் தொடர்பிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தவறியதாகவும் வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் ரீதியான அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் மகிந்த செயற்பட்டு வருவதாக வர்ணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...