Friday, 12 February 2016

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்
வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், கடந்த ஆறு தசாப்தங்களாக இன முரண்பாட்டுகள், சமத்துவமின்மை, ஜனநாயக அத்துமீறல், சிங்கள பௌத்த நாடு எனும் தன்மை ஆகியவை இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களுக்கு காரணம்  என குறிப்பிட்டார்.
 
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மாநில அரசாக்கப்பட்டு அங்கு வாழும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இணையான அதிகார பங்கீடு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து வழங்கியதுபோல் வட, கிழக்கு பகுதிக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையேல் பிரித்தானிய ஆதிக்கத்தில் உள்ள ஸ்கொட்லாந்திற்கு தனி இராட்சிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
கருத்தறியும் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்ரர்சோசை உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளான அருட்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Loading...