3 ஆண்டுகளில் பழங்களை உற்பத்தி செய்யும் 15,000 கிராமங்கள்
மூன்று ஆண்டுகளில் பழங்களை உற்பத்தி செய்யும் 15 ஆயிரம் கிராமங்களை ஏற்படுத்த உள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தலா ஆயிரம் பழக்கன்றுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,நாட்டில் புதிய அரசாங்கம் பழங்களை உற்பத்தி செய்து அவற்றினை ஏற்றுமதி செய்யும் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
