அமெரிக்காவிற்குப் பயணமாகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மாத இறுதியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச பிரகடன மொன்றில் கைச்சாத்திடும் நோக்கில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.உலகின் பல நாடுகளது தலைவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் பற்றிய மேலதிக விபரங்களை ஜனாதிபதி செயலகம் இது வரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
