Saturday, 5 March 2016

யாழ். ஊடகங்கள் மீது சுவாமிநாதன் பாய்ச்சல்!

யாழ். ஊடகங்கள் மீது சுவாமிநாதன் பாய்ச்சல்!
யாழ். ஊடகங்கள் மீது சுவாமிநாதன் பாய்ச்சல்!
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் பொருத்தும் வீட்டுக்கு (பிற்றிங்) எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம் சுமத்தினார். 

அத்துடன், இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஊடகங்களே எதிர்ப்பாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் முன்னோடி மாதிரி வீட்டை நேற்றுப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்த வீடு இன்னமும் முழுமை பெறவில்லை. மூன்று தினங்களுக்குள் இதனைப் பூர்த்தி செய்து விடுவார்கள். அதன் பின்னர் மக்கள் இந்த வீட்டைப் பார்க்கட்டும். எத்தனையோ பத்திரிகைகள் இந்த வீட்டைப் பற்றி எதிராக எழுதியுள்ளார்கள். ( ஊடகவியலாளர்களைப் பார்த்து ) நீங்கள்தான் இந்த வீடு தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை வைக்கின்றீர்கள்.

நீங்களே இந்த வீட்டைப் பாருங்கள். உங்கள் மனதுக்கு இதனை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா ? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 
யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் போது எதிர்ப்பு இல்லாமல் நடக்காது. எல்லாவற்றிலும் குறைகூறிக் கொண்டிருந்தால் முன்னேற்றம் காண முடியாது. நாங்களும் தமிழர்கள்தான். தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என்றார். 
Loading...