Saturday, 19 March 2016

நடிகர் கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம்-கேரள அரசு அறிவிப்பு



நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது.நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, தெரிவித்தார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக தெரிவித்தனர்.

உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கலாபவன் மணியின் குடற்பகுதிகள் ரசாயன ஆய்வுக்காக கொச்சியில் உள்ள வட்டார ரசாயன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அவருடைய உடலில் கொடிய விஷம் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
Loading...