Thursday, 9 March 2017

கிழக்கு முதலமைச்சரின் பங்கேற்புடன் எதிர்வரும் 14 ஆம் திகதி கிழக்கு பட்டதாரிகள் தொடர்பில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல்

முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  கோரிக்கைக்கு  அமைவாக கிழக்கில்  பாடசாலைகளில்  உள்ளவெற்றிடங்களை நிரப்புவது  தொடர்பான கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது,

 

திறைசேரியில்  இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பிரதமரின்  பணிப்புரைக்கமைய அவரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம்    தலைமை  தாங்கவுள்ளதுடன்  இதன்போது  கிழக்கு மாகாண  பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்  மற்றும்  அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில்   முக்கிய தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.


தேசிய  திட்டமிடல்  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  இடம்பெறவுள்ள இந்த் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண  கல்விமைச்சர் எஸ்,தண்டாயுதபானி ,தேசிய கல்வி அமைச்சின் செயலாளர்,திறைசேரியின் பணிப்பாளர் நாயகம்,தேசிய திட்டமிடல்  திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம்,ஆளுனரின் செயலாளர், தலைமைசெயலாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக்  கல்விப்  பணிப்பாளர் உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள்  இந்தக் கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளனர்.

 

இதனூடாக  கிழக்கில்  உள்ள 4703  அதிபர் மற்றும்  ஆசிரியர் வெற்றிடங்களுக்கு   பட்டதாரிகளை  உள்ளீர்ப்பதற்கான  பொறிமுறை  தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு  தீர்வொன்றைப்  பெற்றுக்  கொடுக்கும் நோக்கில்  கடந்த பெப்ரவரி  மாதம்  28 ஆம் திகதி  கிழக்கு  முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்த்து  கிழக்கில் உள்ளவெற்றிடங்கள்  மற்றும்  அவற்றுக்கு  பட்டதாரிகளை  உள்ளீர்த்தல் தொடர்பில்  விரிவாக தெ ளிவுபடுத்தினார்.

 

இந்த  சந்திப்பையடுத்து பட்டதாரிகள் தொடர்பில்  ஒருவார காலத்திற்குள் சாதகமான  நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  என உறுதியளித்திருந்த நிலையில் குறித்த காலக்கெடு நிறைடைவதற்குள்   கிழக்கில் உள்ளவெற்றிடங்களை  நிரப்புவது  தொடர்பான தீர்மானமிக்க கூட்டமொன்றை  நடத்துவதற்கு  பிரதமர் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 எதிர்வரும்  14 ஆம் திகதி  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்     ஆலோசகர்  ஆர் பாஸ்கரலிங்கம் மற்றும் கிழக்கு  முதலமைச்சர் ஆகியோருக்கிடையில் தனிப்பட்ட  கலந்துரையாடலொன்றும்  இடம்பெறவுள்ளது.

 

இதன் போது  கிழக்கில்  ஏனைய  அரச  திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கும்  பட்டதாரிகளை  உள்வாங்குவது  தொடர்பில்  இதன் போது  கிழக்கு முதலமைச்சர் பிரதமரின்  ஆலோசகரை வலியுறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கில்  பட்டதாரிகள் விவகாரம்  தொடர்பில்  அரசியல்வாதிகள்  மீது  விமர்சனங்கள்   முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்  கிழக்கு  முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட்டின் திறமையான ஆளுமையின் மூலம்  ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடந்த ஆட்சியாளர்களால் கிழக்கில் வெற்றிடங்களே  இல்லையென  கூறப்பட்டு  வந்த  நிலையில்  கிழக்கில்  5021 வெற்றிடங்கள்  உள்ளது என்பதை முதலமைச்சர் நசீர் அஹமட்டே அதனை சுட்டிக்காட்டி அவற்றை  நிரப்புவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை  முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தி  வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது,


கிழக்கு  மாகாண  கல்வியியற் கல்லூரி  ஆசிரியர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர்  வெ ளி மாகாணங்களில்  கஷ்டப்  பிரதேசங்களுக்கு நியமனம்  பெற்று வந்த   நிலையில்   தான்   முதலமைச்சராக பதவியேற்று  இரண்டே  ஆண்டுகளில்  அந்த  நடைமுறையை மாற்றிக்காட்டியமை சுட்டிக்காட்டத்தக்கது,


அத்துடன்  ஹாபிஸ் நசீர் அஹமட்  அவர்கள்  கிழக்கு  முதலமைச்சராக பதவியேற்று   இரண்டு ஆண்டுகளே  நிறைவடைந்துள்ள நிலையில் கிழக்கில்  ஆயிரக்கணக்கோன  பல்வேறுவெற்றிடங்கள் நிரப்ப்ப்பட்டுள்ளதுடன்  பல பகுதிகளிலும் கோடிக்கணக்கான நிதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,


புதிய அரச நியமனங்கள்  மற்றும்  அரச  தொழில் வாய்ப்புக்களுக்கான நிதி திறைசேரியினாலேயே  வழங்கப்பட்டு வரும்  நிலையில் இந்த கலந்துரையாடல்  கிழக்கு மாகாண  வரலாற்றில்  முக்கிய   மைல்கல்லாய்  அமையும்  என கருதப்படுகின்றது.

                                                                             கிழக்கு மாகாண முதலமைச்சரின்

                                                                                 ஊடகப் பிரிவு

 

 

 

 

 

 

 

 




Loading...
  • உலகிலேயே முதன்முதலாக தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர் 02.08.2015 - Comments Disabled
  • குமுறும் சமூகம் மீண்டும் ஏமாறுவார்களா? இல்லையா ?09.03.2016 - Comments Disabled
  • இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம்17.01.2016 - Comments Disabled
  • The Sri Lankan Obsession With Superlatives & Superiority25.10.2015 - Comments Disabled
  • பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன?16.11.2015 - Comments Disabled