யாழில் இடம்பெறும் சேவைகளை கிழக்கில் காணோம்; பிள்ளையான் கவலை!
நல்லாட்சி என்ற மகுடத்தின் கீழ் செயற்படும் புதிய அரசாங்கம், கிழக்கு மாகாண அபிவிருத்தியை புறக்கணித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் சொந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் கிழக்கில் இன்னும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை யாழ்ப்பாண அரசியல்வாதிகள் அங்குள்ள மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றனர்.
எனினும் கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் உரிய சேவைகள் தமது மக்களுக்கு வழங்கவில்லை என்று பிள்ளையான் குற்றம் சுமத்தினார்.