பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யாராய் நகைகளை அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உடல் மெலிந்த சோர்வான கருப்பு நிறத்திலான குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போலவும் இருந்தது.
இந்த விளம்பரம் இனவெறியை பிரதிபலிப்பதாகவும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் நகைகடைக்கும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைகடை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகைகடை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளம்பரத்தில் ராஜவம்சத்தை சேர்ந்த பெண் கொண்டிருந்த பாரம்பரிய அழகை நேர்த்தியாக காட்டவே நாங்கள் திட்டமிட்டோம். இந்தத் தவறு எங்களை மீறி நடந்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விளம்பரத்தை நாங்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.