எனக்கு தெரிந்த அரசியல் வரலாற்றில் இப்போது போன்று பழி வாங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றதை அறிந்ததில்லை. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எல்லோருக்கும் சிறைச்சாலைகளிலேயே இருக்க வேண்டிய நிலைமையேற்படும்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மத்திய மாகாண முன்னாள் தலைவர் மஹிந்த அபேகோனை பார்வையிடுவதற்காக நேற்று கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு தெரிந்த அரசியல் வரலாற்றில் இது போன்ற அரசியல் பழிவாங்கும் செயற்பாடுகளை அறிந்ததில்லை. இப்படியே போனால் எல்லோரும் சிறைச்சாலையிலேயே இருக்க வேண்டிய நிலைமையேற்படும். தற்போது இடம்பெறுவது நல்லாட்சியல்ல அரசியல் பழிவாங்கள் அரசியலேயாகும். என தெரிவித்துள்ளார்.