பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61.
டைட்டானிக், அவதார், பிரேவ்ஹார்ட் உள்ளிட்ட மிகப் பிரபலமான படங்களின் இசையமைப்பாளரான ஹார்னர், இரண்டு முறை ஆஸ்கர் விருது வாங்கியவர்.
விமானியாகப் பயிற்சி பெற்றிருந்த ஜேம்ஸ் ஹார்னர், ஒரு சிறிய விமானத்தை தனியாக ,திங்களன்று காலை சாண்டா பார்பராவுக்கு வடக்கே விபத்துக்குள்ளானார்.
டைட்டானிக் படத்தின் பின்னணி இசைக்காகவும், அப்படத்தில் வரும் 'மை ஹார்ட் வில் கோ ஆன்' என்ற பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர்களை வாங்கிய ஹார்னர், இவையல்லாது வேறு எட்டு முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஏற்பட்ட தீயை உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் ணைக்க வேண்டி வந்திருந்தது.