பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என பிரஜைகள் சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பாராளுமன்றில் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவசியமான திருத்தங்கள் இல்லாமலேயே 19வது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டதாகவும் 20ம் திருத்தத்தை அவ்வாறு செய்ய முடியாது என்றும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதனால் தற்போதுள்ள தேர்தல்படி விரைவில் பாராளுமன்றை கலைத்து அதன்பின் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறு பிரஜைகள் சக்தி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனால் அவர்கள் பயங்கரவாதம் போல் கொதித்தெழ வாய்ப்புள்ளதெனவும் அமைப்பு எச்சரித்துள்ளது.