அல்ஹாஜ் எம்.எச்.எ.சமத் ,B.Com,Dip.in Com ,MBA, FBIM(UK), JP (Whole Island)
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சமூக நல அபிவிருத்தி ஆலோசகராக அல்ஹாஜ் எம்.எச்.எ.சமத் அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஒரு சிறந்த கல்விமானும்,கல்வித் துறையில் பல பட்டம்கள் பெற்றவரும் ஆவார். சமூக சேவை துறையியல் மிகவும் ஆர்வம் உள்ளவராவார் என்பது இங்கு குறிப்பிட தக்கது.இவரது சேவை நமது சமூகத்துக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு அவரது பங்களிப்பை வரவேற்கிறது
சேவை விபரம் எம்.எச்.எ.சமத் (M.H.A.SAMAD)

1961 தொடக்கம் 1975 வரை:
அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரி, கல்முனை சாஹிரா கல்லூரி, உடதலவின்ன ஜாமிஉல் அஷர் கல்லூரி, கொழும்பு T.B.ஜாயா மஹா வித்யாலய, தெமட்டகொட தமிழ் மஹா வித்யாலயம் உட்பட பல பாடசாலைகளில் 16 ஆண்டுகள் ஆசிரியராக சேவையாற்றியுள்ளேன்.
1976 தொடக்கம் 1980 வரை:
இலங்கை தொழில் நுட்ப கல்லூரி வணிக விரிவுரையாளராகவும் இலங்கை தொலைக்கல்வி நிறுவனம் (SLIDE) தற்போதைய திறந்த பல்கலைக்கழகம்) தமிழ் பகுதி பொறுப்பதிகாரியாகவும் ,சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லுரியிலும் கடமையாற்றியுள்ளேன்.
1980 தொடக்கம் 1983 வரை:
தென் ஆபிரிக்காவின் கம்பியா நாட்டில் முகாமைக்கல்வி விரிவுரையாளராகவும் நைஜீரியாவில் (WAEC) கிலும் கடமையாற்றியுள்ளேன்.
1984 தொடக்கம் 1989 வரை:
சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியில் உபஅதிபராகவும், அதிபராகவும் அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லுரியில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளேன்.
1990 தொடக்கம் 1992 வரை:
தெஹிவளை உயர் தொழில் நுட்ப கல்லூரி, மருதானை சிறிலங்கா தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் அதிபராக கடமையற்றியுள்ளேன்
1992 தொடக்கம் 1995 வரை:
பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கான இக்ரா தொழில் நுட்பக்கல்லூரியின் ஸ்தாபக அதிபாராக கடமையாற்றியுள்ளேன்.
1996 தொடக்கம் 2001 வரை:
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க மந்திரிசபை அங்கீகாரத்துடன் அவரது அமைச்சின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டேன்.
அவரது அகால மரணத்தின் பின் பேரியல் அஷ்ரப் காலத்திலும் ஒரு வருடம் ஆலோசகராக கடமையாற்றியுள்ளேன்.
2002 தொடக்கம் 2005 வரை:
வீரகேசரி பத்திரிகை I O M (UN) ஸ்தாபனங்களில் ENGLISH , TAMIL, SINHALA, மொழிமாற்ற சேவையாளராகவும் கடமயாற்றயுள்ளேன்

அலைந்த கால் ஆயிரம் பொன் பெறும் என்பதற்கு அமைய கல்வி சுற்றுலா, செயட்பட்டறை, பயிற்சி உயர்கல்வி தொழில்வாய்ப்பு என்பவற்றுக்காக நான் சென்றுள்ள நாடுகள்
லண்டன் பங்களாதேஷ் நைஜீரியா கம்பியா இந்தியா பிரான்ஸ் தாய்லாந்து
துபாய் அபுதாபி ஷாஜா மக்கா மதீனா செனகல் ஜோர்ஜ்டவுன் என்பன குறிப்பிடத்தக்கன.

கல்வி மற்றும் பெற்றுக்கொண்ட தொழில் தகமைகள்
பயிற்றப்பட்ட ஆசிரியர் (அட்டளைச்சேனை ஆசிரியர் கலாசாலை)
B.COM.(CEY) English Medium) University of Peradeniya.
Diploma in Commerce (GTC COLOMBO)
Diploma in English (Advance Tech. Dehiwala)
FBIM (UK) BRITISH INSTITUTE OF MANAGEMENT LONDON.
MASTER OF BUSINESS ADMINISTRATION (MBA) Trinity College affiliated to university of California.
Self instructional lesson writer (Open University UK)

கடந்த 50 ஆண்டுகளாக என்னால் செய்யப்பட்ட சேவைகளில் பின்வருவனவற்றை சிறப்பாக குறிப்பிடலாம்.
1960-70 ஆம் ஆண்டுகளில் தொழிநுட்ப கல்வித்துறையில் முஸ்லிம் மாணவர்களின் பிரவேசம் 0.8% மட்டுமே இருந்தது. முஸ்லிம் சமூகம் வியாபாரத்தையே நம்பி இருந்ததது. அதற்கான காரணங்களாக தொழில் நுட்ப கல்வி அந்த சமூகம் திரளாக வாழும் மாகாணங்களுக்கு செல்லவில்லை.
கொழும்பில் 1896இல் தொழில் நுட்பக்கல்லுரி ஆரம்பிக்கப்பட்டபோதிலும் அது 350 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சம்மாந்துறைக்கு போவதற்கு 78 ஆண்டுகள் எடுத்ததன. அதுவும் கலாநிதி பதியுடீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக வந்ததாலேயே சம்மாந்துறைக்கு ஒரு தொழில் நுட்ப கல்லூரி கிடைத்தது.
ஏனைய சிங்கள மாகாணங்களில் உள்ள தொழில் நுட்பக்கல்லுரிகளில் முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பது கடினமாக இருந்ததுடன் மட்டுமன்றி அறியாமையும் முஸ்லிம் மக்களிடம் ஆர்வமும் இல்லாத நிலைமை இருந்தது. இந்த நிலை மாற்றி முஸ்லிம் மாணவர்களை தொழில் நுட்பக்கல்விதுறையில் உள்வாங்குவதற்கு பல்வேறு ஊர்களிலும் விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் நடாத்தி.கட்டுரைகள் பல எழுதியும் வானொலி தொலைக்காட்சி களில் பேட்டி நிகழ்சிகள் பலவும் நடாத்தி வந்தேன். மர்ஹூம் ACS.Hameed உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்குவதகற்கு மருதானை சிறிலங்கா தொழில்நுட்பக்கல்லுரியில் ஒரு தமிழ்பிரிவை அமைப்பதற்கு தெஹிவளை தொழில்நுட்பகல்லூரியில் அதிபராக இருந்த என்னை அங்கு இடமாற்றம் செய்து இப்பணியை மேற்கொள்ளும்படி பணித்தார். நான் அப்பணியை சிறப்பாக செய்து 400 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி வழங்கினேன். தேவையான தமிழ் முஸ்லிம் போதனாசிரியர்களும் நியமனம் பெற்றனர்.
முஸ்லிம்களுக்காக ஒரு தொழில்நுட்பக்கல்லுரியை அமைப்பதற்கு சவூதி அராபிய இக்ரா பவுண்டேசன் நிதியுதவி அளிக்க முன்வந்த போது மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் வேண்டுகோளை ஏற்று எனது அரசாங்க உத்தியோகத்தையும் எனது 52 ஆவது வயதில் உதறித்தள்ளிவிட்டு தன்னிச்சையாக ஓய்வுபெற்றபின் இக்ரா தொழில் நுட்ப கல்லூரியின் ஸ்தாபாக அதிபராக பதவி ஏற்றேன். அங்கு நான்கு ஆண்டுகள் கடமையாற்றினேன்
மர்ஹூம் எம் எச் எம் அஷரப் அமைச்சராக வந்ததும் எனது சேவையின் தேவை கருதி தேசிய ரீதியில் சேவையாற்ற என்னை அழைத்தார். அமைச்சர்அவையின் அங்கீகாரத்துடன் அவரது விசேட ஆலோசகராக நியமிக்க்பட்டேன். ஆண்டுதோறும் 10,000 முஸ்லிம் மாணவர்களை தொழில் நுட்ப கல்வித்துறையில் உள்வாங்குவதற்கு ஒரு கருத்திட்டத்தை தயாரித்து அமைச்சரிடம் கொடுத்தேன். NORAD நிதியுதவியை அமைச்சர் பெற்றுத்தந்தார்
அம்பாறை மாவட்டடத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பிரதேச சபையிலும் ஒரு RVTCயும் ஒரு மாவட்டத்திற்கு' ஒரு DVTCயும் அமைத்து அப்பகுதிகளில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு போதனாசிரியர் பதவிகளும் வழங்கப்பட்டன. இத் திட்டத்தை தொழிற் பயிற்சி அதிகார சபையினூடாக புனர்வாழ்வு அமைச்சின் அனுசரனையுடன் செயற்படுத்தப்பட்டது. இவை தவிர விதவைகளுக்கான சுய தொழில் திட்டமும் செயற்படுத்தப்பட்டது. யாழ்ப்பான அகதிகள் வாழும் புத்தளம் மாவட்டத்திலும் தொழிற்பயிற்சி நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டன.
இத் திட்டம் புனர்வாழ்வு அம்மசின் அனுசரனையுடன் NAITA ஊடாக செயற்படுத்தப்பட்டது.
NDPHR ஊடக அறிவித்தல்