Sunday, 14 June 2015

உள்ளிணக்கம் காணவேண்டிய மீளிணக்கம்

எஸ்.எம்.எம். பஷீர்
“வரலாற்றில்,காரணங்களும் மீள் இணக்கமும் நிலவுவதான தருணங்கள்  குறுகியவை, விரைந்து செல்பவை”   ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig)
இலங்கையின் முன்னைய அரசு புனர்வாழ்வு 2009 இல் யுத்தம் முடிந்த கையேடுdisabled LTTE cadreதங்களிடம் சரணடைந்த அல்லது தாங்கள் கைது செய்த சுமார் 12,000   ஆயிரம்  புலி இயக்க  உறுப்பினர்களுக்கு  அவர்களின் எதிர்கால வாழ்வுக்காக பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகளையும் அளித்து  மீண்டும் சமூகத்துடன் ஒன்றினையும் வகையில் அவர்களை விடுதலை செய்துள்ளது. கடந்த அரசு மிகப் பெரிய பாரிய புனர் வாழ்வுப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. ஆனால் சென்ற வாரம் காயமுற்ற புலிகளுக்கு அரசாங்க  இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவையில் சில அமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மந்திரி சபை அறிக்கையை  சம்பிக்க ரணவக்க கடுமையாக எதிர்த்தன் விளைவாய் அந்த அறிக்கை கைவிடப்பட்டுள்ளது.
 இன்றைய அரசின் பங்காளியும் அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க புலிப் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடா என்று குமுறி இருக்கிறார்.  அந்தக் குமுறலுக்கு பயந்து அந்த அறிக்கையை கொண்டு வந்த  அமைச்சர்கள் அடங்கி போயிருக்கின்றனர். புலிகள் பயங்கரவாதிகள் என்பது பற்றியல்ல இன்றையக் கேள்வி சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்த பொழுது முன்னைய அரசு அவர்களுக்கு சுய தொழில் செய்ய கடனுதவி வழங்கியது. பலருக்கு கல்வியைத் தொடரவும் வழி  செய்து கொடுத்தது, தொழில் வாய்ப்பு பெறவும் உதவி அளித்தது. அவையும் ஏதோ ஒரு விதத்தில் இழப்பீடு வழங்குவது போல போல்தான் அப்பொழுதும் சம்பிக்க ஆட்சியில் இருந்தார் , அவரை கேட்டு அமைச்சர்கள் அடங்கிப் போகவில்லை , இன்று இவரின் குரலுக்கும் , குமுறலுக்கும் வலுவும் சக்தியிமிருக்கிறது ,  அவர் சுமந்திருக்கின்ற அமைச்சுப்பதவி போல! முன்னைய அரசில் இவரின் "ஆட்சி" இருந்திருக்குமானால்  சரணடைந்த , கைதான  புலிகளின் புனர்வாழ்வு விவகாரம்  இருந்திருக்கும் என்பதை அவரின் இந்த செயற்பாட்டின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.  
இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சரணடைந்த புலிகள் தொடபாக  முக்கியGTF1மாக மூன்று " ஆர் " ( அம்சங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. (Rehabilitation , Reintegration and Reconciliation )  புனர்வாழ்வு ,  மீள் ஒருங்கிணைப்பு , மீள் இணக்கம். புனர்வாழ்வு மூலம் மீள் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் இடம் பெற்றிருப்பினும்    சமூகங்களுக்கு இடையிலான மீள் இணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடாகும். ஒரு புறம் அந்த செயற்பாட்டினை செய்வதாகக் கூறி  புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய இலண்டனைத் தளமாகக் கொண்ட , இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373 க்கு இயைவாக சென்ற வருடம் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம்  "அயல் நாட்டு பயங்கரவாத அமைப்புக்கள்" வரிசையில் இடம்பெற்ற உலகத் தமிழ்ப் பேரவையுடன் , அத்தகைய தீர்மானம் அமுலில் இருக்கும் வேளையில் ,   அதனையும் மீறி மங்கள சமரவீர அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
சென்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை இலண்டனில் சந்தித்து அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய சின்னம் சிறு தமிழ்க் குழுவொன்று , அவர்கள் புலம்பெயர் சமூகத்தின் ஏக பிரதிநிதிகளாக  படம்போட்டு  புளகாங்கிதம் அடைந்து  சில மாதங்கள் செல்லவில்லை , ரணிலின் பிரதிநிதி மங்கள சமரவீர , புலிகளின் முகவர் நிறுவனத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது வேறு ரணிலின் ஆதரவு சிறு குழுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.  புலம் பெயர் சமூகத்தில் புலி எதிர்ப்பாளர்களான அவர்களின் ஆதங்கமும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது!
இந்த நிலையில் உலகத் தமிழ் பேரவையுடனான சந்திப்பு ஒரு மீளினக்க செயற்பாடுDSC00027என மங்கள  காரணம் கூறி உள்ளார்.  புலம்பெயர் இலங்கையர்களை மீள் வருவதை வரவேற்க இலங்கையில் இவ்வருட இறுதியில் ஒரு  உற்சவம்    நடத்த இருப்பதாகவும் மங்க சமரவீர மீள் இணக்க செயற்பாடாக அறிவித்துள்ளார். ஆனால் சம்பிக்க அந்தநிகழ்வு பற்றியும் தனது  ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். ஆக மீள் இணக்கம் என்பது  மங்களவை பொருத்தவரை இன்னமும் குணம் மாறாத(புனர்வாழ்வு அளிக்கப்படாத புலம்பெயர் ) புலிகளை மாற்றிவிடலாம் என்று நம்பிச் செயற்படுகிறார் மற்றவர். அந்த மீளினக்க செயன்முறைக்கு எதிர்ப்புக் காட்டுகிறார்.   அது குறித்த அவரின் அக்கறையை இன்னமும் புலிகள் பயங்கரவாத இயக்கமாக இருக்கும் வரை , வெளிநாட்டு புலி முகவர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருக்கும் வரை சட்டப்படி நியாயமானதே. ஆனால் புலியில் சேர்ந்து அவயங்களை இழந்து மற்றும் பல விதத்தில் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது -இழப்பீடு -வழங்குவது என்பது நிச்சயமாக மீளினக்க செயற்பாடாகும் .  மனந்திருந்தாத புலம்பெயர்  புலிகளை  விட அவர்களின் முகவர்களைவிட மனந்திருந்திய புலிகள் தொடர்பில் செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் மீளினக்கத்துக்கு அவசியமானதாகும்.
புலியில் சேர்ந்து அவயங்களை இழந்து , செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டு புலிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடும் பெண்களின் படங்கள் சொல்லும் செய்தி , அவர்களுக்கு   உதவுவது என்பது அரசியின் தார்மீக கடமையாகும் !  


Thanks Bazeerlanka.com
13.06.2015    







Loading...
  •  Educating & Persuading The Public In Economic Hard Times12.06.2016 - Comments Disabled
  • சாலமன் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை02.07.2015 - Comments Disabled
  • ஒற்றுமையைக் குலைக்கும் ரவூப்மும் ரசாதும் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் 28.07.2015 - Comments Disabled
  • தேர்தல் விளம்பரம் திக்காமடுள்ள மாவட்டம் 04.08.2015 - Comments Disabled
  • தொலைக்காட்சித் தொடர்கள்...கவிதை 21.11.2015 - Comments Disabled