Sunday, 21 June 2015

சர்வேதேச யோகாசன தினத்தையொட்டி உலகம் முழுவதும் நிகழ்வுகள்

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உலகம் முழுவதும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கும் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தலைநகர் தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
null
இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி.
35,000 பள்ளிக் குழந்தைகள், அதிகாரிகள், வீரர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி தலைநகர் தில்லியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
null
தில்லியின் ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் பிற நகரங்களிலும் நடந்த யோகாசன நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தில்லியின் ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சிக்காக, அந்தப் பாதை முழுவதும் பல வண்ணங்களில் யோகாசனம் செய்வதற்கான பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், கூடியிருப்பவர்களிடம் உரையாற்றுவார் என்று மட்டும்தான் முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிறகு அவரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ராஜ்பாத்தில் நடந்த 35 நிமிட நிகழ்ச்சியில் 35,000 பேர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் அதிகம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் முடிவுகள் சில மணி நேரங்களில் கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
null
தைவானில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள்.
சியாச்சின் மலைச் சிகரங்களிலும் நடுக்கடலிலும்கூட யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என இந்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
தற்போது நியூயார்க்கில் இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூனுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், சில இஸ்லாமிய அமைப்புகள், யோகா என்பது இந்து மதச் சடங்கு என்று குறிப்பிட்டுள்ளன.
null
ஆஃப்கானிஸ்தானில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
பழங்கால இந்திய கலையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில்தான் பாரதீய ஜனதாக் கட்சி அரசு இம்மாதிரியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக விமர்சனங்கள் இருக்கின்றன.
ஆனால், அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுளை மறுத்துள்ளனர். யோகா தின நகழ்வுகளில் பங்கேற்பது கட்டாயமல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தில்லியில் நடந்த யோகாசன நிகழ்ச்சிக்கு 30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் யேமனைத் தவிர 192 நாடுகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளன.
நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் நடந்த நிகழ்வில் 30,000 பேர் பங்கேற்றனர்.
ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தினார்.
Loading...