ஆஃப்கானிஸ்தானின் குண்டஸ் மாகாணத்தில் உள்ள முக்கியமான மாவட்டமான சர்தாராவை தாலிபான்கள் கைப்பற்றிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாணத் தலைநகருக்கும் விமான நிலையத்திற்கும் அருகில் உள்ள இந்த நகரின் வழியாகத்தான் காபூலுக்குச் செல்லும் சாலை போகிறது. எனவே, வியூக முக்கியத்துவமுள்ள இடமாக சர்தாரா கருதப்படுகிறது.
அந்தப் பகுதியில் தாங்கள் பிடித்திருக்கும் காவல் நிலையத்தைச் சுற்றி தாலிபான்கள் சென்றுகொண்டிருக்கும் படம் ஒன்றை தாலிபான் இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த நகரையும் தாலிபான்கள் கையில் இருக்கும் பிற பகுதிகளையும் திரும்ப மீட்பதற்கான தாக்குதலை அரச படைகள் துவங்கியுள்ளன.
பதக்ஷான் மாகாணத்தில் உள்ள யும்கான் என்ற இடத்தை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினர். அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
