Tuesday, 30 June 2015

எல்.ரீ.ரீ.ஈ மற்றும் தமிழர்களில் உள்ள சிறுபான்மையான சில பைத்தியக்காரர்களினதும் முஸ்லிம் விரோத இனவாதம்

Izeth-Hussain

 இசத் ஹ_சைன்

ஏப்ரல் 28, மே 2, மற்றும் மே 9, ஆகிய தினங்களில் த ஐலன்ட் பத்திரிகையில் மIzeth-Hussainூன்று பகுதிகளாக வெளிவந்த தமிழர்களில் உள்ள சிறுபான்மையினரான சில பைத்தியக்காரர்களின் முஸ்லிம் விரோத இனவாதம் என்கிற கட்டுரையின் பின்னிணைப்புத்தான் இந்தக் கட்டுரை.

 இந்தக் கடடுரையை எழுத நான் உந்துவிக்கப் பட்டதாகவே உணர்கிறேன் ஏனெனில் நான் கடைசியாக எழுதிய கட்டுரைக்குப் பின் அரசியல் சூழ்நிலை தீவிரமாக மாற்றம் பெற்றுவிட்டது. அந்த நேரத்தில் நானும் மற்றும் அனைவரும் நடைமுறையில் எல்.ரீ.ரீ.ஈ யினை பார்த்தது எல்.ரீ.ரீ.ஈயின் எச்சங்களாகவே, வெறுமே கடியோ வீரியமோ இல்லாத அதன் பயனற்ற இருப்பாக. நாங்கள் தவறாக எடை போட்டு விட்டோம். ஓரளவு காலமாக எச்சம் என்கிற அடைமொழியின் வரம்பையும் மீறி எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு அடைந்து வருகிறது,

2009க்கு முன்பிருந்த எல்.ரீ.ரீ.ஈ க்கு சமமாக இல்லாவிட்டாலும் கூட, ஏராளமான கடி மற்றும் வீரியம் நிறைந்த ஒரு புலியாக அது உள்ளது, தெளிவாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து இப்போது நான் எல்.ரீ.ரீ.ஈ யினை கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர்களில் உள்ள சிறுபான்மையினரான சில பைத்தியக்காரர்களின் முஸ்லிம் விரோத இனவாதம் கட்டுரையை மீளாய்வு  செய்யவேண்டிய நிலையில் உள்ளேன்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2014ல் எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகள் பற்றிய சமீபத்தைய அறிக்கை இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு புத்துயிர்ப்பு நடைபெறுகிறது என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது: “எல்.ரீ.ரீ.ஈ அதன் சர்வதேச தொடர்புகள் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசியா என்பனவற்றில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோரை பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்தல், தொடர்பாடல்களை நடத்துதல் மற்றும் ஏனைய அவசியமான தேவைகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. தங்கள் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கவும் மற்றும் நிதியை திசை திருப்பவும் அது அறக்கட்ளைகளை முன்னிலையாக பயன்படுத்தி வருகிறது”. ஆயுதங்களை கொள்வனவு செய்வது பற்றிய விபரங்கள் என்பது அதிர்ச்சி தரும் ஒரு விளைவு. இந்த அறிக்கையின் விளைவாக, பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்ச்சைக்குரிய உலகத் தமிழர் பேரவைத் தலைவர் மற்றும் சிலருடன் லண்டனில் நடத்திய சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு வழி கோலியது.

 ஜூன் 21ல் சண்டே ஐலன்ட் இல் குமார் டேவிட், வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தமிழர்களின் தலைவராக மாறும் தனது இலட்சியத்தை வெளிப்படையாகவே விருத்தி செய்கிறார் என்பது பற்றி எழுதியுள்ள கட்டுரைக்கும் நான் கனம் கொடுக்க விரும்புகிறேன். எனவே அதன் காரணமாக அவர் அரசாங்கத்துடன் ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அவர் பிரதமர் விக்கிரமசிங்காவினால் தனிமைப் படுத்தப்பட்ட பின்பு, ஜனாதிபதி சிறிசேனவை தீவிரமாக விமர்சிப்பவராக மாறியுள்ளதுடன் மற்றும் சாட்சிபூர்வமான அர்த்தம் பகரும் எல்.ரீ.ரீ.ஈ யின் பக்தர்களாகிய கடும்போக்கு தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் உதய சூரியனாகவும் மாறியுள்ளார். இந்த பந்தியில் உள்ள விபரங்கள் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு விரிவாக்கம் பெற்றுள்ளதை உறுதிப் படுத்துகிறது.

இப்போது நான் எனது முந்தைய கட்டுரையில் உள்ள சில விபரங்களை திரும்பச் சொல்லப் போகிறேன்.

எனது கட்டுரைகள் த ஐலன்ட் மற்றும் கொழும்பு ரெலிகிராப் ஆகிய பத்திரிகைகளில்; ஒரே நேரத்தில் பிரசுரமாகியிருந்தன. பல வாரங்களாக அது சம்பந்தமாக சாதகமான பதில்கள் மற்றவர்களைக் காட்டிலும், உலகத் தமிழர் பேரவையின் பிதா எஸ்.ஜே இமானுவல் உட்பட பெரும்பாலான தமிழ் வாசகர்களிடமிருந்தே எனக்கு கிடைத்திருந்தது,

மற்றும் கனடாவில் உள்ள ஒரு தமிழ் புலம்பெயர் சஞ்சிகை எனது இரண்டு கட்டுரைகளை மொழிமாற்றம் செய்தும் வெளியிட்டிருந்தது. அவை எதுவும் ஆச்சரியம் தரவில்லை ஏனென்றால் பல தசாப்தங்களாக சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதையும் மற்றும் அந்த பாகுபாட்டுக்கு முஸ்லிம்கள் துணை போவதையும் பற்றி நான் விமர்சித்து வந்திருக்கிறேன். திடீரென எனது கட்டுரைகளுக்கு எதிராக தாக்குதல்கள் எழுந்தன, அவை பல வாரங்களாக நீடித்து வந்தது. அந்த தாக்குதல்களில் ஒருவகை முரண்பாடான தன்மை இருப்பதை நான் கவனித்தேன். அவற்றில் பெரும்பாலானவர்கள் தங்கள் புனைபெயரை பயன்படுத்தியிருந்தார்கள், அவை ஒரு தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தியது. மற்றையது தாக்குதல்கள் நியாயமற்றதாக இருக்கலாம், அவமானப்படுத்துவதாகக் கூட இருக்கலாம், ஆனால் அவை  இந்த தமிழர்கள் மேற்கொண்ட தாக்குதல்களை விட மிகவும் மிதமானவை. நான் கேள்வி கேட்டேன் “ ஏன் இந்த வெறுப்பு?” ஏனென்றால் பதில்களில் காணப்படும் தீவிர தமிழர் வெறுப்பை விளக்கத் தக்கதான எதுவும் எனது கட்டுரைகளில் இருக்கவில்லை. கொழும்பு ரெலிகிராப்பில் வெளியான ஏனைய கட்டுரைகளுக்கு வந்த பதில்களுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடியதான எதுவும் இருக்கவில்லை என்பதையும் நான் மேலும் அவதானித்தேன்.

இந்த கட்டுரைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அவை கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டவையாக இருந்ததுதான், தனிப்பட்ட தமிழர்களின் கற்பனையின்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஒரு விடயமாக அது இருக்கவில்லை. அவர்கள் எனது முதல் கட்டுரையில் இருந்து ஆரம்பிக்கவில்லை, ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு பல வாரங்களாக அவர்கள் அதைத் தொடர்ந்தார்கள் கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டுத் தமிழர்கள் அதை செய்தார்கள், மர்மமான முறையில் ஒரு சுருங்கிய காலத்திற்கு அது தணிந்திருந்தது, அதன் பின்னர் திடீரென அவர்கள் அதை முற்றாக நிறுத்தும் வரை இன்னும் பல வாரங்களுக்கு அவர்கள் அதைத் தொடர்ந்தார்கள். பின்னர் முந்தைய நாட்களைச் சேர்ந்த ஒரு சிலர் அல்லது தனியாக விடப்பட்டவர்கள் புதிதாக வந்த சிலருடன் கூட்டுச் சேர்ந்து மேலும் தாக்குதல்களை தொடர ஆரம்பித்தார்கள், ஆனால் இந்த வெறுப்புப் பிரச்சாரம் நீடித்து நிற்கவில்லை. அதில் மிகவும் முக்கியமாகத் தெரிவது, என்னவென்றால் எனது முந்தைய கட்டுரைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய தமிழர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதுதான்.

இந்த தாக்குதல்களை ஒருங்கிணைந்து நடத்தியவர்கள் யார்? அநேகமாக நிச்சயம் புத்துயிர் பெற்ற எல்.ரீ.ரீ.ஈ யினர்தான். இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்கள் ஏன் நிறுத்தப் பட்டன? எல்.ரீ.ரீ.ஈ க்குள் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் மற்றும் மிதவாதிகளுக்கும் இடையில் போராட்டம் நடக்க சாத்தியம் உள்ளது மற்றும் மிதவாதிகள் பக்கம் மேலோங்கி இருக்கலாம்.

இப்போது நான் தமிழர்களிடையே உள்ள பைத்தியக்கார சிறுபான்மையினரின் முஸ்லிம் விரோத இனவாதத்தை எல்.ரீ.ரீ.ஈ யின் கண்ணோட்டத்திலும் அதன் பின் பொதுவான கண்ணோட்டத்திலும் சில அவதானிப்புகளைச் செய்ய உள்ளேன்.

தமிழ் இனவாதிகளால் எனக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்துள்ளன, அதை எல்.ரீ.ரீ.ஈ யின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மட்டுமே எனது மனதுக்கு அர்த்தம் தெரிகிறது.

முதலாவது குற்றச்சாட்டு நான்; பல தசாப்தங்களாக படுபயங்கரமான தமிழருக்கு எதிரான இனவாதியாக இருந்து வருகிறேன் என்பது. உண்மையில் அது முழு முட்டாள்தனமானது. மற்றும் அது அவர்களுக்கும் தெரியும், ஆனால் அவர்கள் அதை நம்பும்படி காட்ட முயற்சிக்கிறார்கள். எனது முந்தைய கட்டுரையில் தமிழர்கள் அல்லாதவர்கள் மத்தியில் ஓரளவு விதிவிலக்காக தமிழர்கள் மீது அனுதாபம் காட்டும் ஒருவனாக என்னைக் கணித்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரமான விபரங்களைக் கொடுத்திருந்தேன்.

ஆனால் எல்.ரீ.ரீ.ஈ வகையான தமிழர்களின் மனங்களில் அது எதுவிதமான பதில் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்.ரீ.ரீ.ஈயின் எழுச்சிக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு ஆயுதமாக நான் பஞ்சம் பற்றி வாதிடுகிறேன் என அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார்கள். துல்லியமாக அதற்கு எதிராக நான் வாதிடுகிறேன் என்பதைக் காட்டுவதற்கான விரிவான விபரங்களை நான் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் அதுவும்கூட அவர்களின் மனங்களில் எந்தவித பதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

உண்மை என்னவென்றால் எல்.ரீ.ரீ.ஈ வகையான தமிழர்கள் நான் தமிழர்களுக்கு விரோதமானவன் என்பதை நம்பவேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தில் இருந்தார்கள், இதன் பின்னாலிருந்த பைத்தியக்காரத் தனமான தர்க்கம் பின்வருமாறாக அமைந்திருந்தது: எல்.ரீ.ரீ.ஈக்கு ஈழ விவகாரம் மட்டுமே முக்கியமாக இருந்தது, அந்த வழிக்கு குறுக்காக நிற்பவர்கள் தமிழர்களுக்கு விரோதமானவர்கள் என்று கருதப்பட வேண்டும் என்பதாக இருந்தது, என்னைப் போன்ற முஸ்லிம்கள் உட்பட.

மற்றைய குற்றச்சாட்டு நான் இந்தியாவுக்கு எதிரானவன் என்பது, அதுவும் ஒரு முழு முட்டாள்தனம். ஒருவேளை பைத்தியக்காரத் தனமான எல்.ரீ.ரீ.ஈ யின் பின்னாலுள்ள தர்க்கம் பின்வரும் வரிகளின் படி செல்கிறது.

இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமே ஈழத்தை பெறமுடியும் என்று எல்.ரீ.ரீ.ஈக்குத் தெரியும். கிழக்கிலுள்ள வளமான விவசாயக் காணிகள் பிரத்தியேகமாக தமிழரகளிடம் மட்டுமே இருக்க வேண்டும் என எல்.ரீ.ரீ.ஈ விரும்பியது, அதற்கு கிழக்கில் முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு அவசியமாக இருந்தது.

 தமிழீழத்தை ஒரு பரிசாக வழங்குவதற்கு இந்தியாவிற்கு தான் முற்றாக பாதுகாப்பாக உள்ளதாக உணரத் தக்கதான ஒரு பிரதேசம் வேண்டியிருந்தது, அதற்காக அதற்கு விரோதமாக உள்ள எந்தக் குழுவையும் இனச் சுத்திகரிப்பு செய்யவேண்டியது அவசியமானதாக இருந்தது. எனவே எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் விதிவிலக்கில்லாமல் முஸ்லிம்களையும் இந்திய விரோதிகளாக காட்டும் திட்டம் ஒரு அசத்தலான யோசனையாக இருந்தது. அது எல்.ரீ.ரீ.ஈ யின் பைத்தியக்காரத் தனமான ஒரு தாக்கம். அதற்கு மாற்று விளக்கங்களை நான் திறந்து விடுகிறேன்.

எல்.ரீ.ரீ.ஈ யின் இனவாதம் மற்றும் தமிழரில் உள்ள சிறுபான்மை பைத்தியக்காரர்களின் இனவாதம் என்பனவற்றுக்கு இடையே தரத்தில் ஒரு வேறுபாடு இருப்பதை நான் உணருகிறேன். இரண்டு பகுதியினரும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான பகுத்தறிவுடன் கூடிய மனத்திறனுள்ள ஒரு போக்கினைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதனை நான் இனவாதத்தின் தொகுப்பாகவே பிடித்துக் கொள்கிறேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் விடயத்தில் தார்மீக உணர்வுகளும் கூட நிறுத்தி வைக்கப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன.

 மேலதிக அதிகார நடவடிக்கைகள் இரண்டு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது நன்கு நிறுவப்பட்ட உண்மை, அதற்குச் சாத்தியமான விளக்கம்: ஒரு பலவீனமான பிடியில் உள்ள யதார்த்தம் மற்றும் எது சரி எது தவறு என்று வேறுபடுத்தி அறிய முடியாத இயலாமை என்பன.  நாங்கள் அனைவரும் நன்கு அறிந்தது,

எல்.ரீ.ரீ.ஈ  துரதிருஷ்டம் பிடித்த தமிழர்களை அதன் காலடியின் கீழ் வைத்து முற்று முழுதான அதிகாரத்தை நீண்டகாலமாக அனுபவித்து வந்தது என்பதை, அந்த அதிகாரம் அப்பட்டமான மிருகத்தனம் வாய்ந்ததாகவும் மற்றும் கொஞ்சமேனும் தார்மீக ஈவிரக்கம் அற்றதாகவும் காணப்பட்டது.

எனது கருத்து என்னவென்றால் சாதாரண தமிழரில் உள்ள சிறுபான்மை பைத்தியக்கார இனவாதி தனது தார்மீக உணர்வை மொத்தமாக இழந்து விடவில்லை என்பதாகும். அவனது விடயத்தில் ஓலமிடும் விளக்கம் என்னவென்றால், அவனது முஸ்லிம் விரோத இனவாதத்தில் உள்ள தீவிரம் அவனது சிங்கள எதிர்ப்பைக் காட்டிலும் மிகவும் அதிகம்.

 இந்த கட்டுரையின் எஞ்சிய பகுதிக்கு ஒரு தற்காலிகமானதும் மற்றும் சுருக்கமானதுமான ஒரு விளக்கத்தை பரிந்துரைக்கின்றேன். அந்த விளக்கத்தின் வெளிப்படையான பகுதியாக வருவது, தமிழர்களின் சாதி அமைப்பு மிக அதிகம் இறுக்கமானது, சிங்களவர்களுடையதைக் காட்டிலும் மிக அதிகமான படிநிலை அமைப்பைக் கொண்டது. மலையகத் தமிழர்களுடன் எந்த விதமான ஐக்கிய உணர்வையும் கட்டியெழுப்பத் தவறியமைக்கான அதிர்ச்சி தரும் உண்மைதான் இந்த விளகத்தின் ஒரு பகுதியாகும்.

முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாக கருதுவதற்கு சிங்கள இனவாதிகளைக் காட்டிலும் தமிழ் இனவாதிகள் அதிக நாட்டம் காட்டுவார்கள் எனக் கருதுவது நியாயமானது எனத் தெரிகிறது. உளவியல் ஆய்வாளரான சிக்மன்ட் புறூட் சுட்டிக்காட்டியுள்ள கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மக்களிடையே இடம் பெறும் சமரசத்திற்கு இடமில்லாத மிகக் கொடூரமான சண்டைகளைப் பற்றிய உண்மைதான் என் மனதிலும் ஓடுகிறது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒரு பொதுவான மொழியியலைக் கொண்டுள்ளார்கள்.

நிறைவு செய்வதற்கு முன் மீண்டும் ஒருமுறை நான் வலியுறுத்த வேண்டியது, தமிழரின் இனவாதம் தொடர்பான எனது கண்டனங்கள் யாவும் பிரயோகிக்கப்பட வேண்டியது ஒரு சிறிய பகுpயான தமிழர்களிடையே மாத்திரமே

மற்றும் பொதுவாக எல்லா தமிழர்களிடத்தும் அல்ல, மேலும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே அவர்களில் எந்தப் பகுதியினரும் சிங்களவர்களிடம் கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறப்பான பரஸ்பர ஒத்துணர்வு காணப்படுகிறது.

முடிவுரையாக நான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும், தமிழர்களிடையே உள்ள சில பைத்தியக்கார சிறு பிரிவினர் எனக்கு எதிராக ஏன் இத்தனை வெறுப்பையும் சீற்றத்தையும் திருப்பி விட வேண்டும்? அதற்கான விளக்கமாக நான் நம்புவது, வழக்கமான ஒரே தன்மையான முஸ்லிம்களான சிறந்த தொழிலதிபரின் தன்மையுடனோ அல்லது சிறப்பான போதை மருந்து கடத்தல்காரர்களின் தன்மையுடனோ சேருவதற்கு நான் பொருத்தமற்றதாக இருப்பதுதான்,

அத்தகையவர்களை வலியற்ற சகிப்புத் தன்மை கொண்டவர்களாக, அடிப்படையில் தரங்குறைந்த மனிதர்களாகவும் நடத்த முடியும். இதற்கு முரண்பாடாக கடந்த பல தசாப்தங்களாக நான் கீழ்வரும் தோற்றங்களைக் கொண்டிருக்கின்றேன்:

ஒரு அறிவாளியாக, ஒரு பொது அறிஞனாக, மிகவும் உயர்ந்த கல்வித் தகமை கொண்ட உரைநடை எழுத்தாளனாக, ஒரு அரசியல் ஆய்வாளனாக, இலக்கிய உலகின் ஒரு அங்கத்தவனாக, கலாச்சார ரீதியில் முற்றிலும் மேற்கத்திய நாகரிகம் கொண்டவனாக மற்றும் முற்றிலும் அறிவுள்ளவனாக இருந்திருக்கின்றேன்.

இதன் விளைவாக ஒரு தமிழ் இனவாதி எனது கட்டுரை ஒன்றை வாசிக்கும்போது மிகைப்பாடான வெறுப்பு நிலைக்கு ஆளாகிறான், அது வெறிபிடித்த ஒரு பைத்தியக்கார நாயின் ஆத்திரத்தை அவனுள் தூண்டி விடுகிறது. வாரக்கணக்காக என்மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவனது முதல் பந்தியில் தவிர்க்க முடியாத அர்த்தமற்ற சொற்களான, முட்டாள், பைத்தியம், அறிவற்றவன், மூடன், மனோதிடம் இல்லாதவன் போன்றவற்றை பயன்படுத்தியிருந்தான்.

அவனுக்கும் மற்றும் ஏனைய தமிழ் இனவாதிகளுக்கும் எனது சிநேகபூர்வமான அறிவுரை: இனவாதம் ஒரு நோய். அதிலிருந்து சீக்கிரம் குணமடைவீர்களாகுக.

Loading...